மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
தேனி
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 542 கன அடியாக இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,125 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 136.55 அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1866 கன அடியாகவும் உள்ளது.
Related Tags :
Next Story