பொள்ளாச்சி அருகே பீர்பாட்டிலால் தாக்குதல்;தொழிலாளி படுகாயம்


பொள்ளாச்சி அருகே பீர்பாட்டிலால் தாக்குதல்;தொழிலாளி படுகாயம்
x

பொள்ளாச்சி அருகே பீர்பாட்டிலால் தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள பழனியூரை சேர்ந்தவர் ராஜன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வன். இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். சம்பவத்தன்று ராஜன், செல்வனிடம் மோட்டார் சைக்கிளில் செல்ல லிப்ட் கேட்டதாக தெரிகிறது. அதற்கு போதையில் இருந்த செல்வன் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதை ராஜன் தட்டி கேட்டார். இதையடுத்து அங்கிருந்து சென்ற செல்வன், மீண்டும் வந்து தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story