கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தர்ணா


கலெக்டர் அலுவலகம் முன்பு  அரசு ஊழியர்கள் தர்ணா
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 1-1-2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும், முடக்கப்பட்ட சரண்டர் பணப்பலன்களை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தணிக்கையாளர் முருகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகமணி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story