பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய விழா: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்


பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய விழா: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
x

பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய விழாவையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

சென்னை

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

அதன் விவரம் வருமாறு:-

* திரு.வி.க. பாலம், எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பஸ் நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடைசெய்யப்பட்டு, எல்.பி. சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்கள் இலக்கை அடையலாம்.

* 7-வது அவென்யூ மற்றும் எம்.ஜி.ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

* எம்.எல். பூங்காவில் இருந்து மாநகர பஸ்கள், பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பஸ் நிலையத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மேற்கண்ட வாகனங்கள் ஆவின் பூங்கா, எல்.பி சாலை வழியாக, எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1-வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

* பெசன்ட்நகர் பஸ் நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும் மாநகர பஸ்கள் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ மற்றும் எல்.பி. சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story