மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையேரெயில் இயக்க வேண்டும்


மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையேரெயில் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Oct 2023 2:00 AM IST (Updated: 14 Oct 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே ரெயில் இயக்க தென்னக ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து உள்ளனர்.

கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே ரெயில் இயக்க தென்னக ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து உள்ளனர்.


ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை


திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தது. இந்த பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு, தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


இந்த நிலையில் கொரோனாவிற்கு முன் பொள்ளாச்சி-கோவை இடையே இயக்கப்பட்ட ரெயில் சேவை தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே அந்த ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மனு கொடுத்தனர்.

இதை ஏற்று பொள்ளாச்சி- கோவை, கோவை- பொள்ளாச்சி, தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே ரெயில் இயக்க ரெயில்வே வாரியத்துக்கு தென்னக ரெயில்வே பரிந்துரை செய்து உள்ளது. ஆனால் தற்போது வரை ரெயில்கள் இயக்கப்படவில்லை.


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-


அழுத்தம் கொடுக்க வேண்டும்


தற்போது பொள்ளாச்சி- கோவை இடையே காலை, மாலை நேரங்களில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் கொரோனாவிற்கு முன் பொள்ளாச்சியில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 12.10 மணிக்கும், அங்கிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 3.30 மணிக்கு வரும் வகையில் ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயில் சேவை தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக மேட்டுப்பாளையத் தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக ரெயில் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த இரு ரெயில் சேவையை தொடங்க தென்னக ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து உள்ளனர். ஆனால் இன்னும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.


எனவே மக்கள் பிரதிநிதிகள் ரெயில்வே வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்து, பரிந்துரைக்கப்பட்ட ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story