பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா


பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 22 Sept 2022 12:30 AM IST (Updated: 22 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் அழகர்கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவின் 2-ம் நாளில் நையாண்டிமேளம் முழங்க பக்தர்கள் சக்தி கிரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.

3-ம் நாளான நேற்று தீச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. 4-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறை தலைவர் பொன்ராஜ் தலைமையில் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story