பகவதி அம்மன் கோவில் திருவிழா


பகவதி அம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 10 March 2023 12:30 AM IST (Updated: 10 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தேனி

பெரியகுளம், வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பழமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது. விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில் இளைஞர்கள் குழுவாக சேர்ந்து தீச்சட்டி எடுத்து தெருக்களில் வலம் வந்தனர். விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story