தங்க கேடயத்தில் பக்தோசித பெருமாள் வீதி உலா
சோளிங்கர் கோவிலில் தங்க கேடயத்தில் பக்தோசித பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை பக்தோசிதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மங்கள வாத்தியங்களுடன் சன்னதி தெரு கோடி வரை வீதி உலா நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர். வீடு தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து பக்தோசித பெருஐமாள் அருள்பெற்றனர்.
Related Tags :
Next Story