204 கிராம பஞ்சாயத்துகளில் பாரத் நெட் இணையதள வசதி


204 கிராம பஞ்சாயத்துகளில் பாரத் நெட் இணையதள வசதி
x

நெல்லை மாவட்டத்தில் 204 கிராம பஞ்சாயத்துகளில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 கிராம பஞ்சாயத்துகளிலும், இணைதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது, வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. கண்ணாடி இழை இணைப்பு 85 சதவீதம் மின் கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் உள்ள சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ள அறை, பஞ்சாயத்து தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கான உபகரணங்களை பாதுகாக்கவும், தடையில்லா மின்வசதி இருப்பதை உறுதி செய்யவும், அந்த அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணிக்கவும் பஞ்சாயத்து செயலாளர் பொறுப்பாளராக செயல்படுவார். இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


Next Story