பூலித்தேவர் பிறந்த நாள்: இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பூலித்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
"சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்.
நெற்கட்டும்செவலில் நினைவு மாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது தி.மு.க. அரசு. இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story