நிம்மியம்பட்டு அரசு பள்ளியில் நுழைவு வாயில் கட்டும் பணிக்கு பூமி பூஜை


நிம்மியம்பட்டு அரசு பள்ளியில் நுழைவு வாயில் கட்டும் பணிக்கு பூமி பூஜை
x

நிம்மியம்பட்டு அரசு பள்ளியில் நுழைவு வாயில் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

திருப்பத்தூர்

நிம்மியம்பட்டு அரசு பள்ளியில் நுழைவு வாயில் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர பள்ளி நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், ஊர் நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்பேரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி நுழைவு வாயில் வளைவு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நிம்மியம்பட்டில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற செந்தில்குமார் எம்.எல்.ஏ.அங்கு தலைமையாசிரியர் மற்றும் நிர்வாகிகளிடம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.


Next Story