ரூ.1½ லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்ட பூமிபூஜை


ரூ.1½ லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்ட பூமிபூஜை
x

ரூ.1½ லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்ட பூமிபூஜை

திருவாரூர்

முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனம் கிராமத்தில் தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், கரையங்காடு, விளாங்காடு, தில்லைவிளாகம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சென்று முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவேண்டிய நிலை இருந்தது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், போலீஸ் இன்ஸ்ெபக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக புறக்காவல் நிலையம் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி சச்சிதானந்தம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் என். பழனிவேல், வர்த்தக சங்க தலைவர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story