புதிய பஸ் நிலையம் கட்ட பூமி பூஜை


புதிய பஸ் நிலையம் கட்ட பூமி பூஜை
x

ஆடுதுறையில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட பூமி பூஜை நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.3 கோடியே 17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் கட்ட பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத், துணைத் தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்ஜினீயர் ரமேஷ் வரவேற்றார். இதில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், செ. ராமலிங்கம் எம்.பி., பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துபீவி ஷாஜகான், மீனாட்சி முனுசாமி, சரவணன், செல்வராணிசிவக்குமார், கோ.சி. இளங்கோவன், ம.க பாலதண்டாயுதம், வர்த்தகர் சங்க தலைவர் மூர்த்தி (எ) ராஜாராமன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழைய பஸ் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இதனால் பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையம் அருகில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


Next Story