எஸ்.புதுப்பட்டியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை


எஸ்.புதுப்பட்டியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை
x

புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சாமிநத்தம் பஞ்சாயத்தில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதனைதொடர்ந்து சாமிநத்தம் கிராமத்திலும், எஸ்.புதுப்பட்டி கிராமத்திலும் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு ரூ.26 லட்சத்து 26ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சாமிநத்தம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 16ஆயிரம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிகள் கடந்த மாதம் தொடங்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கி்ன்றது. நேற்று எஸ்.புதுப்பட்டியில் ரூ.13லட்சத்து 16ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடத்திற்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி பாலகுருசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகேஸ்வரி சேதுராஜ் முன்னிலை வகித்தார். சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் பூமிபூஜையில் கலந்து கொண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து செயலாளர் செந்தில்வேல், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story