கீழ்குப்பம் கிராமத்தில் ரூ.16¼ லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை

கீழ்குப்பம் கிராமத்தில் ரூ.16¼ லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
அரக்கோணம்
கீழ்குப்பம் கிராமத்தில் ரூ.16¼ லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டி அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர் இந்த அரசு நம் மாவட்டத்திற்கு எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் போது அரக்கோணத்தில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்பட்டது. தற்போது அந்த கல்லூரியில் கூடுதல் முதுகலை பாட பிரிவு ஒன்றும், ஆராய்ச்சி பாட பிரிவுகளான எம்.பில். மற்றும் பி.எச்.டி. படிப்புகள் தொடங்குவதற்கு வலியுறுத்தியும் இதுவரை தொடங்க படாமலே இருந்து வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பிரகாஷ், கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன், காவனூர் கூட்டுறவு வங்கி தலைவர் ராமசாமி, பொது மக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.






