பாலக்கோடு அருகே சின்னாற்றில் ரூ.4.65 கோடியில் புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை


பாலக்கோடு அருகே சின்னாற்றில் ரூ.4.65 கோடியில் புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 10 Jun 2023 1:00 AM IST (Updated: 10 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு

பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் புதிய 4 கிணறுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஏப்ரல் மாதம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று சின்னாறு படுகையில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து கிணறு தோண்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் கணேசமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தலைமை எழுத்தர் அபுபக்கர் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story