கொல்லப்பட்டி ஊராட்சியில்ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜைமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


கொல்லப்பட்டி ஊராட்சியில்ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜைமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
சேலம்

கருப்பூர்

கருப்பூர் அருகே கொல்லப்பட்டி ஊராட்சி பகுதியில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை, கான்கிரீட் சாலை, சாக்கடை கால்வாய், பேவர் பிளாக் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா தர்மலிங்கம் வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஓமலூர் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஓமலூர் மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சண்முகம், ஜெயலலிதா பேரவை செயலாளர் தளபதி, கருப்பூர் நகர செயலாளர் கோவிந்தசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story