குடிநீர் திட்டத்திற்கு பூமிபூஜை


குடிநீர் திட்டத்திற்கு பூமிபூஜை
x

மல்லாங்கிணறு பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

மல்லாங்கிணறு பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை

மல்லாங்கிணறு பேரூராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் அமைய உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் 1½ லட்சம் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இரண்டும், 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூன்றும் கட்டப்பட உள்ளன. முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பழுதடைந்த 20 தொகுப்பு வீடுகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சத்தை பயனாளிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

குடிநீர் இணைப்பு

இந்த திட்டத்தின் மூலம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்தநிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ், செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story