21 திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமிபூஜை


21 திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமிபூஜை
x

21 திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமிபூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம்-வெம்பக்கோட்டை சாலையில் குண்டாயிருப்பு கிராமத்தில் திருநங்கைகளுக்கு புதிய வீடு கட்ட பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் திலகவதி, மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுண்டங்குளம், புலிப்பாரைபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள திருநங்கைகள் 21 நபர்களுக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் செலவில் 21 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்கான ஆணையை பயனாளிகளிடம் கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டைதாசில்தார் ரங்கநாதன், தனி தாசில்தார் ராமசுப்பிரமணியம், வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சத்யவதி, செல்வராசு, வெம்பகோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எதிர்கோட்டை ஜெயபாண்டியன், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், குண்டாயிருப்பு கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story