மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வகுப்பறை கட்ட பூமி பூஜை; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
விளாத்திகுளம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே.எஸ்.டபுள்யூ. நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story