தினந்தோறும் நீர்ப்பங்கீடு என தீர்ப்பை பெற்றிருந்தால் இருமாநில உறவு மேம்பட்டிருக்கும்: கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி


தினந்தோறும் நீர்ப்பங்கீடு என தீர்ப்பை பெற்றிருந்தால் இருமாநில உறவு மேம்பட்டிருக்கும்:  கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி
x

தினந்தோறும் நீர்ப்பங்கீடு என தீர்ப்பை பெற்றிருந்தால் இருமாநில உறவு மேம்பட்டிருக்கும் என கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

கரூர்

கரூரில் நேற்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

28 ஆண்டுகால சட்ட போராட்டத்தில் தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி காவிரி வழக்கை தமிழ்நாடு அரசே நடத்தி தீர்ப்பை பெற்றிருந்தால் இருமாநில உறவு மேம்பட்டிருக்கும். மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். மேகதாது அணைக்கட்டும் எண்ணமும் கர்நாடகாவிற்கு வந்திருக்காது.

மாதாந்திர அடிப்படையிலான நீர்ப்பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும் வரை கர்நாடாகாவின் வடிகாலாகவே தமிழ்நாடு இருக்க வேண்டி வரும். பருவ மழை குறையும் ஆண்டுகளில் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் போனால் தமிழ்நாடு பாலைவனமாகும். நடைமுறைப்படுத்தினால் கர்நாடகம் பாலைவனமாகும். 2023-24-ம் ஆண்டிற்கான மதுபான கொள்கையை முடிவு செய்வதற்காக கேரள முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் கள் இறக்குவதற்கும், விற்பனைக்கும் முக்கியத்துவம் அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது. கேரள கள் என்ற பிராண்ட் பெயரிலேயே மதுபான கடைகளில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் அரசியலமைப்பு சட்டத்திற்கும், உலகளாவிய நடைமுறைக்கும் மாறாக கள் தடை 35 ஆண்டுகளாக தொடர்கிறது.

வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் அறப்போராட்டம் அறிவித்தபடி நடைபெறும். கலப்படத்தை ஒழித்தாலே 75 சதவீத மருந்து கடைகள், 50 சதவீத மருத்துவமனைகள் மூடப்படும். அப்போது பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை தேடுவது போல மருத்துவ கல்லூரிகள் மாணவர்களை தேடும் நிலை உருவாகும். இதுவே நீட் தேர்வை ஒழிக்க வழி. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story