தி.மு.க. சார்பில் மோட்டார்சைக்கிள் போட்டி


தி.மு.க. சார்பில் மோட்டார்சைக்கிள் போட்டி
x

உடுமலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மோட்டார்சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.

திருப்பூர்

உடுமலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மோட்டார்சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உடுமலையை அடுத்த சின்னவீரம்பட்டியில் மோட்டார்சைக்கிள் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம். தங்கராஜ் என்கிற மெய்ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். போட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வீரர்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். 10 பிரிவுகளில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் வரையில் பரிசுகளும், 35 கோப்பைகளும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

தி.மு.க.வினர்

இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகரச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், மாவட்டஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ருத்ரப்பன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தென்றல்சேகர், உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், பாபு ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், காலாவதி பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story