இருதரப்பினர் மோதல்;சிறுவன் உள்பட 2 பேர் கைது
சேலம்
பனமரத்துப்பட்டி
ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது. இந்நிலையில் 13-ந் தேதி இரவு நைனாம்பட்டி மற்றும் தானாகுட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் முன் நடனம் ஆடினர். அப்போது இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் உருட்டு கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி நேற்று நைனாம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனையும், தானகுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தரண் (வயது 20) ஆகியோரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தார். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story