இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு
x

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

விருதுநகர்


சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் மற்றும் பொருட்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன.. இதில் ரொக்கமாக ரூ.53 லட்சத்து 67 ஆயிரத்து 824-ம், 174.8 கிராம் தங்கமும், 528 கிராம் வெள்ளியும் கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக ஆய்வாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story