பறவைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்


பறவைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x

சின்னசேலம் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராசு வழிகாட்டுதலின் படி கச்சிராயப்பாளையம் பிரிவு வனவர் சின்னதுரை தலைமையில் பறவைகள் ஆர்வலர் கீர்த்தி, தகரை காப்புக்காடு வனக்காப்பாளர் மணிகண்டன், பூசப்பாடி காப்புக்காடு வனக்காவலர் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகரை (வடக்கு) காப்புக்காடு பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 36 வகையான தரை வாழ் பறவை இனங்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவைகள் உள்ளது கண்டறியப்பட்டது. பறவை இனங்களை பாதுகாக்கவும், அவைகளை வேட்டையாடுவதை தடுக்கவும் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story