திருச்செந்தூர்,காயாமொழியில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா


தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:45 PM GMT)

திருச்செந்தூர்,காயாமொழியில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் கீழ ரதவீதி தேரடி திடலில் திருச்செந்தூர் ஒன்றிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நற்பணி மன்ற ஒன்றிய அமைப்பாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். இதில் மூத்த வக்கீல் சந்திரசேகரன், முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜபாண்டி, பா.ஜ.க. மாநில மகளிரணி செயலாளர் நெல்லையம்மாள், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திகுமார், நற்பணி மன்ற ஆயுள்கால உறுப்பினர்கள் ராஜேஷ், பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காயாமொழியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், காயாமொழி நற்பணி மன்ற பொருளாளர் ராஜேந்திர ஆதித்தன், செயலாளர் மகதும், முன்னாள் யூனியன் துணை தலைவர் சண்முகசுந்தரம், கண்ணன், கோபால், பட்டாணி, கணேசன், இளங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story