குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள்


குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

சிவகங்கை

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில், குன்றக்குடி அடிகளாரின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாங்குடி எம்.எல்.ஏ., குன்றக்குடி ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தி.மு.க. தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கருஅசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குன்றக்குடி அடிகளார் நினைவு மண்டபத்தில் இருந்த குன்றக்குடி அடிகளாரின் புகைப்பட கண்காட்சிகளை பார்வையிட்டனர். இதில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மருதுபாண்டி, காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து, குன்றக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அலமேலுமங்கை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story