கரூரில் 50 பைசாவிற்கு பிரியாணி: வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு
கரூர் அருகே உணவகம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக 50 பைசாவிற்கு பிரியாணி என அறிவித்திருந்தனர்.
கரூர்:
கரூர் காந்திகிராமம் பகுதியில் ஒரு அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக அந்த உணவகம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான சலுகையாக நேரில் வந்து பிரியாணி உண்ணும் 100 பேருக்கு பேருக்கு, 50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி என அறிவித்திருந்தனர்.
இதனால் இன்று அந்த கடை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் 50 பைசா நாணயத்துடன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்செய்தனர். பின்னர் இதுபோன்ற அறிவிப்புகள் ஏதேனும் அறிவித்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உணவக உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story