திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில்பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக திருவிழா


திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில்பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக திருவிழா
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக திருவிழா நடைபெற்றது.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்திபெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆவணி மூலம் நட்சத்திரம், சிவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நேற்று நடைபெற்றது.

இதில் கிருபாபுரீஸ்வரர், மங்களாம்பிகை சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகள் வழியாக வீதிஉலாவாக வந்து, திருவெண்ணெய்நல்லூர் மலட்டாறு கரையில் எழுந்தருளினர். அங்கு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சியும், மலரில் கரைகட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வாணிய செட்டியார்கள் செய்தனர்.


Next Story