நாமக்கல்லில்பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சித்ரா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி வரவேற்று பேசினார். பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் சத்தியபானு, லோகேந்திரன், நகர தலைவர் சரவணன் மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.