பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு


பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
x

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சென்னை,

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அ.ம.மு.க. திருச்சி, தேனி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும், பா.ஜ.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதி கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும் போட்டியிடுகின்றன.


Next Story