போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க., பா.ம.க.வினர் கைது


போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க., பா.ம.க.வினர் கைது
x

ஆம்பூரில் மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க., பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி நேற்று பா.ஜ.க., பா.ம.க., இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகையிட முயன்றவர்களை கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story