பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

கள்ளச்சாராயம் குடித்து மரணங்கள் நடைபெறுவதை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் ரேகா தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணை தலைவர் புவனேஸ்வரி, பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் ராஜசேகரன் (மாநகர்), அஞ்சாநெஞ்சன் (புறநகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் மற்றும் பா.ஜ.க. மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story