திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் கைது


திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் பா.ஜனதா  மாவட்ட துணை தலைவர் கைது
x

திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்த பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவரும், பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா துணை தலைவருமான ஜெயபாலாஜி (வயது 43) முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரின் மனு தள்ளுபடியானது. இதையடுத்து ஜெயபாலாஜியை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story