பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
நெல்லையில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை மேலப்பாளையம் கிழக்கு மண்டல பா.ஜ.க. செயற்குழு கூட்டம், என்.ஜி.ஓ. காலனியில் நேற்று நடைபெற்றது. மண்டல தலைவர் பெரியதுரை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாலகுரு வரவேற்று பேசினார். பிரசார பிரிவு மாவட்ட தலைவர் கோபால் தீர்மானங்கள் குறித்தும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருண் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினர்.
மாவட்ட பொதுச்செயலாளர் டி.வி.சுரேஷ், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலாஜி ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை மாநகராட்சி சரி செய்ய வேண்டும். கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம், விஜய அச்சம்பாட்டில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் தளவாய் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட துணைத்தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் பேசினர்.
ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் பட்டுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.