பா.ஜ.க. பொதுக்கூட்டம்
திருக்கோவிலூரில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடந்தது.
திருக்கோவிலூர்,
பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் தலைமை தாங்கினார். மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜே.வசந்தன், மாவட்ட மகளிர் அணி தலைவர் பத்மாபழனி, மாவட்ட பொது செயலாளர் எஸ்.டி.புவனேஸ்வரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வக்கீல் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் டி.கே.முரளி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், பொதுச் செயலாளர்கள் சதாசிவம், தங்கம், பொருளாளர் குமாரசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், கோ.வெங்கடேசன், மாவட்ட செயலாளர் என்ஜினீயர் எஸ்.ராமலிங்கம், ரமணா பப்ளிக் பள்ளி நிர்வாகி டி.என்.ஆர்.பாஸ்கரன், நிர்வாகிகள் சுந்தர்ராஜ், பார்த்திபன், வெங்கடேசன், குபேரன், பரதன், சுகுமார், அசோக்குமார், மகளிர் அணி சரண்யா திருநாவுக்கரசு, நகர நிர்வாகிகள் பிரபாகரன், சங்கர், ரமேஷ் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் எஸ்.பத்ரிநாராயணன் நன்றி கூறினார்.