பா.ஜனதா- இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா- இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2023 1:25 AM IST (Updated: 10 Jun 2023 3:20 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் பா.ஜனதா- இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலுக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் பின்வாசல் வழியாகத்தான் பாபநாசம் தலையணை, அய்யா கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் வாகனங்களில் சென்று வர முடியும். இந்த நிலையில் கோவிலின் பின்புற நுழைவு வாயில் வழியாக இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்பட அனைத்து வாகனங்கள் செல்வதற்கும், கோவில் முன் வளாகத்தில் உள்ள தற்காலிக கடைகளை அகற்றவும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகம் திடீரென உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவால் பக்தர்கள் அந்த பகுதிக்கு நடந்துதான் செல்ல முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கண்டித்து பா.ஜனதா, இந்து முன்னணியினர் சார்பில் நேற்று பின்புற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கேஸ்வரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் முனிராஜ், பொருளாளர் சண்முகானந்தம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மற்றும் நகர துணை தலைவர் வேலவன், நகர செயலாளர்கள் கணேசன், பொன்னுசாமி, மகாராஜன், சந்தனகுமாரி, இந்து முன்னணி நாகராஜ், கார்த்தி, பால் மாரியப்பன், குட்டி மற்றும் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story