சென்னையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் தொடங்கியது...!


சென்னையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் தொடங்கியது...!
x

சென்னையில் பாஜக மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.


சென்னை.

சென்னை தியாகராயநகாில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக கூறி வருகிறது

இந்த நிலையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


Next Story