'இந்தியா' கூட்டணியை பார்த்து பா.ஜ.க.வுக்கு பயம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது ஒரே தேர்தலுக்காக குழு அமைத்துள்ளார்கள். இதனை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும். மணிப்பூர் சம்பவம், கர்நாடகா தேர்தல் முடிவு, 'இந்தியா' கூட்டணி போன்றவற்றால் மத்திய பா.ஜ.க. அரசு பயத்தில் இருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசை ஒழிக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்துக்காக மனம் மற்றும் கொள்கை வித்தியாசங்களை மறந்து 'இந்தியா' கூட்டணி அமைந்துள்ளது. இதனால்தான் பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியிருக்கிறது. இது பயத்தின் வெளிப்பாடு ஆகும்" என்றார்.
Related Tags :
Next Story