சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பாஜக தான் - அண்ணாமலை பேச்சு


சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பாஜக தான் - அண்ணாமலை பேச்சு
x

சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பாஜக தான் என மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

நீடாமங்கலம்,

சமூக நீதி காக்கும் கட்சி பாஜக தான் என்றார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மாற்றுக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா இன்ற நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் ச.பாஸ்கன் தலைமை வகித்தார்.

மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் எம்.ராகவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வம், செந்தில்அரசன்,ராஜேந்திரன்,சித்தமல்லி ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவின் போது கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

அம்பேத்கர் 1951-ல் பண்டித ஜவகர்லால் நேரு தலைமையில் சட்ட அமைச்சராக இருந்தார். ஆங்கிலேயே அரசு சட்டம் மற்றும் நீர் மேலாண்மை பொறுப்புகளை அம்பேத்கர்க்கு வழங்கியிருந்தது. நேரு ஆட்சியில் அம்பேத்கர்க்கு சட்ட அமைச்சர் பதவி மட்டுமே வழங்கியது.

நேரு அமைச்சரவையில் நீர் மேலாண்மை பொறுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அம்பேத்கர். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு கேபினட்டில் சாதாரண பொறுப்புகளை மட்டுமே கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி பட்டியலினத்த சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார் . குறிப்பாக ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி யாக்கியுள்ளார்.

சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பாஜக தான். தமிழகத்தில் சமூக நீதி பற்றி திமுக பொய் பேசி வருகிறது. பட்டியிலன மக்களுக்கு பாஜக செய்துள்ள உண்மையை பற்றி பேசி வருகிறோம். அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சி தான். இந்திய அரசியல் சாசன தலைவராக பரிந்துரை செய்தது ஜன சங்கம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story