முக்குலத்தோரை பிரதிபலிப்பவர்கள் எவரும் இல்லை


முக்குலத்தோரை பிரதிபலிப்பவர்கள் எவரும் இல்லை
x

முக்குலத்தோரை பிரதிபலிப்பவர்கள் எவரும் இல்லை

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

அ.தி.மு.க. ஒன்றை தலைமை விவகாரத்தில் முக்குலத்தோரை பிரதிபலிப்பவர்கள் எவரும் இல்லை என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் திருப்பூர் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான எஸ்.கர்ணன் தலைமை தாங்கினார். தேசிய இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் அசோக், தொழிற்சங்க மாநில செயலாளர் வடிவேல், மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவரும், மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். முடிவில் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் தொடர் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் என்பது மத்திய அரசின் செலவில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து பா.ஜனதாவிற்கு சேர்க்கும் முயற்சியாகும். நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுக்கெடுப்புக்கு பின்னர்தான் இடஒதுக்கீடு என்ற முடிவு வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை விவகாரத்தில் முக்குலத்தோரை பிரதிபலிப்பவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உள்ளது. இதனை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிவர்த்தி செய்யும்.

பா.ஜனதாவுக்கு வீழ்ச்சி

இந்தியாவில் பல மாநிலங்களில் பணம் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது. மிகவிரைவில் பா.ஜனதா. வீழ்ச்சியை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகில இந்திய மாநாடு, வரும் நவம்பர் மாதம் மாநில மாநாடு, செப்டம்பர் மாதம் மாவட்ட மாநாடு நடத்துவது என்றும், கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைப்பது மற்றும் புதிய கிளைகளை உருவாக்கி கட்சியை பலப்படுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

--

BJP is trying to subvert democracy by buying legislators.


Next Story