அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.க.வினர்


அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.க.வினர்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் பா.ஜ.க.வினர் இணைந்தனர்

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் பா.ஜ.க. தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் அக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தென்னவன் வரவேற்றார். பின்னர் கட்சியில் இணைந்தவர்கள் கோவிந்தராஜ் தலைமையில் இந்து கோவில்கள் சீரமைப்பு குறித்தும், கிராம கோவில்கள் நலன் குறித்து பாடுபடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தமிழர்களின் ஆதி பூர்வீக பழமையான கிராம கோவில் வழிபாட்டு முறையை காக்கும் வகையில் கிராம கோவில் வழிபாட்டு முறையை ஆகமத்தில் இருந்து விடுவித்து வழிபாட்டிற்கு பல்வேறு சீரமைப்பு மற்றும் கிராம கோவில் நலன் குறித்தும், சிவகங்கை மாவட்ட வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் அமைச்சர் குறித்தும் எடுத்துக்கூறினர். இதையடுத்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தி.மு.க.வில் பல்வேறு மாற்று கட்சியினர் இணைவது அதிகரித்து வருகிறது. தொழில்துறையில் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி அதன் மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு வழங்கி, மக்கள் நலனுக்கு பல்வேறு புதிய திட்டங்களும், சுகாதாரம் மற்றும் கல்வி துறையில் புதிய திட்டங்களையும் படைத்து இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியில் 85 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி ஜான் கென்னடி, சேவியர், ருக்மா சரவணன், ரமேஷ், தேவகோட்டை வேலாயுதம், பால்ராஜ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story