தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜக தலைவர்கள் குழு சந்திப்பு...!


தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜக தலைவர்கள் குழு சந்திப்பு...!
x
தினத்தந்தி 23 April 2023 7:24 PM IST (Updated: 23 April 2023 8:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்கள் குழு சந்தித்தது.

சென்னை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசியிருந்ததாக கூறப்படும் ஒலி நாடாவின் (ஆடியோ) உண்மை தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்கள் குழு சந்திக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்கள் குழு இன்று சந்தித்தது. இந்த சந்திப்பின்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்தனர். கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.


Next Story