பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 1:15 AM IST (Updated: 24 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்தும், ஆற்றில் உள்ள வெங்காய தாமரைகளை அகற்றாததை கண்டித்தும், வாய்க்கால்களை தூர்வாராததை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு. நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சரவணன், கலாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதே போல வேதாரண்யம் தாலுகாவில் மருதூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேதாரண்யத்தில் பா.ஜனதா நகர தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர பொதுச்செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் நகர தலைவர் சிவக்குமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் தர்மராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story