பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசி பாலா, மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இளைஞர் அணி தலைவர் பிரபாகரன், பொதுச் செயலாளர் செந்தில், தச்சநல்லூர் மண்டல தலைவர் ஓம்சக்தி மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயசித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story