நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்த அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் நேற்று மாலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், பொதுச் செயலாளர்கள் ஜெகநாதன், வினோத், துணைத் தலைவர்கள் தேவ், சொக்கலிங்கம், மாநில பொதுச்செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் அய்யப்பன், வீரசூர பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

1 More update

Next Story