மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்
மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர் காமராஜர் வளைவில் பா.ஜ.க. நகர தலைவர் சுரேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பேரையும், குரும்பலூர் பஸ் நிறுத்தத்தில் பெரம்பலூர் வடக்கு ஒன்றிய தலைவர் கார்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரையும், குன்னம் பஸ் நிறுத்தத்தில் வேப்பூர் தெற்கு ஒன்றிய தலைவர் தியாகராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரையும், வேப்பந்தட்டை தாலுகா, சின்னாறு பகுதியில் கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரையும் போலீசார் கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்தனர். இதில் 7 பெண்கள் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story