இலவச வேட்டி, சேலை டெண்டர் வழங்குவது தாமதமானால் நெசவாளர்களின் சார்பாக பா.ஜ.க. போராடும் - அண்ணாமலை


இலவச வேட்டி, சேலை டெண்டர் வழங்குவது தாமதமானால் நெசவாளர்களின் சார்பாக பா.ஜ.க. போராடும் - அண்ணாமலை
x

இலவச வேட்டி, சேலை டெண்டர் வழங்குவது தாமதமானால் நெசவாளர்களின் சார்பாக பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒரு நாட்டின் வளமைக்கு முக்கிய காரணமாகவும், அந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாகவும் அமைவது விவசாயம் மற்றும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நாட்டின் வளர்ச்சியில் கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதத்தில் 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதியை தேசிய கைத்தறி தினமாக நம் தேசம் கொண்டாடி வருகிறது.

கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை உயர்த்த தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்திட மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7 கோடியே 54 லட்சம் வழங்கி உள்ளது.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

நெசவாளர்கள் வாழ்வுரிமையான இலவச, வேட்டி சேலை திட்டத்தை மூடு விழா நடத்த இந்த அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.1 கோடி 80 லட்சம் சேலைகளும், 1 கோடி 80 லட்சம் வேட்டிகளையும் நெய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நூலின் கொள்முதலுக்கான டெண்டர்களை இன்று வரை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது.

இப்போது டெண்டர் கொடுப்பதில் தாமதம் ஆவதால் நெசவாளர்களுக்கு ரூ.486 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த டெண்டரை வழங்கவில்லை என்றால் நெசவாளர்களின் சார்பாக தமிழக பா.ஜ.க. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story