ஓமலூரில் பா.ஜனதா ஓ.பி.சி. அணி மாநில மாநாடு
ஓமலூரில் ஓ.பி.சி. அணி மாநில மாநாடு நடந்தது.
ஓமலூர்,
பா.ஜனதா ஓ.பி.சி. அணி மாநில மாநாடு ஓமலூரில் நடந்தது. ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் தங்கராஜி தலைமை தாங்கினார். மாநில தலைவர் சாய் சுரேஷ்முன்னிலை வகித்தார். பா.ஜனதா மாவட்ட தலைவர் சுதிர் முருகன் வரவேற்றார். பா.ஜனதா மாநில பொதுச்ெசயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள தொண்டர்களுக்கு எதிர்காலம் அமைத்துக் கொடுப்போம். பா.ஜனதா தொண்டர்கள் தேச பக்தர்கள். வழக்குகளை கண்டு பயப்பட மாட்டார்கள். தி.மு.க.வின் மிரட்டல்களை கண்டு பாரதீய ஜனதா கட்சி பார்த்துக்கொண்டு இருக்காது. முதல்-அமைச்சர்மு. க.ஸ்டாலின் பா.ஜ.க. தொண்டர்களை அச்சுறுத்தலாம் என்ற கற்பனையை கைவிட்டு விட்டு ஆட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்றார். மாநாட்டில் ராணுவ பிரிவு மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், எம்.காளிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எம்.கே.முருகன், பா.ஜனதா மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஓ.பி.சி. அணி மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் மாற்று கட்சியினர் ஏராளமானவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.