பா.ஜ.க. அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் நூதன ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் நூதன ஆர்ப்பாட்டம்
x

திட்டக்குடியில் பா.ஜ.க. அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்

திட்டக்குடி,

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில பா.ஜ.க., அரசை கலைத்திட வலியுறுத்தியும் விழுப்புரம் மண்டல மக்கள் நீதி மய்யம் சார்பில் திட்டக்குடி பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர், அன்பழகன் வரவேற்றார். கடலூர் மாவட்ட செயலாளர் டாக்டர் செந்தில்குமார் கணேசன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மண்டல செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். தலைமை அலுவலக மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கண்டன உரயாற்றினார். அப்போது, மணிப்பூர் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். ஆனால் சொந்த நாட்டில் நடக்கும் மணிப்பூர் பிரச்சினையை கண் திறந்து பார்க்காமல் இருக்கிறார், இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியினர், கண்களில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆரப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் மாமல்லன், நகர செயலாளர், செழியன், ராஜேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story